ஆந்திராவில் பரவும் ஜிபிஎஸ் நோய். - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

ஆந்திராவில் பரவும் ஜிபிஎஸ் நோய்.


 

 ஜிபிஎஸ் நோய்

               கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த ஜிபிஎஸ் தொற்று முதலில் மகாராஷ்டிராவில் பதிவானது. அங்கு புனேவில் சிலருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சில நாட்களில் மகாராஷ்டிர தலைநகர் மும்பையிலும் இந்த ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்கிடையே இது  ஆந்திராவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இருவர் உயிரிழப்பு

             கடந்த 10 நாட்களில் மட்டும் இருவர் இந்த ஜிபிஎஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. 45 வயது மதிக்கத்தக்கதான பெண்ணும் 10 வயது சிறுவனும் ஜிபிஎஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளதை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் உறுதி செய்துள்ளார். 45 வயது பெண் குண்டூரிலும், 10 வயது சிறுவன் ஸ்ரீகாகுளம் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர்.


About Global Team